காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Wednesday, September 25, 2013

கவிதை புத்தகம்கவிதை புத்தகம் வாசிக்கையில்
எந்தெந்த கவிதைகளில்
எழுத்துக்களுக்குப் பதிலாக
உன் உருவம் தெரிகிறதோ
அவைகள் தான் காதல்
கவிதைகளோ!

தடுமாற்றம்எப்போது உன் கண்களைப்
பார்த்து என் இதயம்
தடுமாறி அதன்
துடிப்பு அதிகமானதோ
அந்தத் துடிப்பில்
தடுமாறிப் பிறந்ததே
என் காதல்.

Tuesday, September 24, 2013

உன் பெயர்எனக்கு உன் மீது
காதலென்றால் என்
பேனாவிற்கு உன்
பெயர் மீது காதல்

எத்தனை முறைதான்
சலிக்காமல் உன் பெயரை
எழுதித் தீர்க்கிறது.

Monday, September 23, 2013

நினைவுகள்வானில் சிதறிக் கிடக்கும்
நட்சத்திரங்களைப் போல
என் மனதில்
சிதறிக் கிடக்கும் உன்
நினைவுகள்தான் என்
காதலை ஒளிரச் செய்கிறது.

Saturday, September 21, 2013

முதல் குழந்தை


நீதான்  என் முதல்
குழந்தை என்றேன்

அதற்காக இப்படியா
நித்தமும் என் காதலோடு
விளையாடிக் கொண்டே இருப்பது