காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Tuesday, July 9, 2013

மன அழுத்தத்தை போக்கும் கிரீன் டீ

டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன்...

யாருக்குத்தான் இல்லை டென்ஷன்?

பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வயது குழந்தையின் கையிலிருந்து பொம்மையை பிடுங்கினால் அது கோபத்தில் கத்தி அலறுவதை கேட்டு நாம் தெறித்து ஓடிவிட வேண்டும். குழந்தைக்கே இத்தனை கோபம் என்றால் அன்றாட வாழ்வில் பற்பல போராட்டங்களை சந்தித்து வாழும் நமக்கு எத்தனை கோபங்கள், மன உலைச்சல்கள் இருக்கும்.

கோபத்தால் மனதில் பட்டதையெல்லாம் பேசி பிறரை நோகடிப்பது ஒரு வகை என்றால், எத்தனை கோபம் என்றாலும் அதை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே புதைப்பதாக நினைத்து மன அழுத்தத்தை வளர்ப்பது மற்றொரு வகை.

இந்த மன அழுத்தம் ஒரு மனிதனை படுத்தும் பாடு பெரும் பாடு. “அய்யோ அவனா? நல்லாத்தான் பேசிட்டே இருப்பான். நாமலும் விளையாட்டா ஏதாவது சொல்லுவோம். ஒன்னுமே இல்லாத அந்த விஷயத்துக்கு கோபப்பட்டு கத்துவான் பாருங்க” என்று ஒருவனை பைத்தியமாகவே நினைக்க வைத்து விடுகிறது இந்த மன அழுத்தம்.

இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி?

தினமும் காலை அரைமணி நேரம் உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் மனதிற்கும், உடலுக்கும் நல்ல ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஆனால் இந்த அவசர உலகில் காலை எட்டு மணிக்கே அவசர அவசரமாய் ஆபிஸுக்கு கிளம்பி ஓடி, மாலை 6 அல்லது 7 மணிக்கு சோர்ந்து போய் வீடு திரும்புபவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஏது நேரம்?

உடற்பயிற்சி, நடைபயிற்சி ஏதுமின்றி இவர்களை மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டுவர ஒரு கப் கிரீன் டீ போதுமே. ”எனக்கு டீ எல்லாம் குடிக்க நேரமில்லை” என்று சொல்லி ஓடுபவர்கள் எவரும் இல்லை.  தொடர்ந்து கிரீன் டீ குடிப்பவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கோபத்தை குறைத்து மன அழுத்தத்தை மட்டுமா போக்குகிறது இந்த டீ? இல்லை. ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் பருமனை குறைக்கிறது. மேனிக்கு பொலிவு தருவதோடு தோல்களில் சுருக்கம் விழுவதை தவிர்த்து இளமையைத் காக்கிறது.

இனி உங்கள் வீட்டில் யாரேனும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருந்தால் பதிலுக்கு பதில் பேசாமல் அவருக்கு ஒரு கப் டீ போட்டு கொடுங்கள். உங்கள்  பிரச்னைகள் விரைவில் தீர்வுக்கு வந்துவிடும்.

3 comments:

 1. இதை பற்றி மற்றவர்கள் சொல்லும்போது சாதாரணமாகத்தான் தெரிந்தது. ஆனால் தற்பொழுது தொடர்ந்து உபயோகப்படுத்தி வரும்போதுதான் எவ்வளவு பயன் உள்ளதாக இந்த க்ரீன் டீ இருக்கு என்பதை உணர்கிறேன்.

  பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. நானும் உபயோகத்தில் தான் உணர்ந்தேன்.

  ReplyDelete
 3. நானும் உபயோகித்து வருகிறேன். Its really great :)

  ReplyDelete