காதலுக்கும் வாசம் உண்டு
Tuesday, October 22, 2013
Saturday, October 12, 2013
காதல் அட்டகாசங்கள்
உனக்கு நான் தான் காபி போடுவேன் என்று அடம்பிடித்தாய்.
நீ காபி போடும் பொழுது நான் உடனிருக்கக் கூடாது என்று நிபந்தனையும் விதித்தாய்.
உன் கண்களைப் பார்த்தேன். காதல் உன் கண்களில் நின்று என்னை எட்டிப் பார்த்துக் கேலியாய் சிரித்தது.
உன் காதல் விளையாட்டு தொடங்கிவிட்டது என்று என் காதலுக்கு புரியாதா என்ன.
உன் காதல் விளையாட்டு தொடங்கிவிட்டது என்று என் காதலுக்கு புரியாதா என்ன.
வழக்கம் போல் என்னிடம் விளையாடுவதாக நினைத்துக்கொண்டு காபியில் வேண்டுமென்றே சர்க்கரைப் போட மறந்தாய்.
நான் எதுவும் சொல்லாமல் குடிப்பதைப் பார்த்துப் பதறிப்போய் “அய்யோ அதில் சர்க்கரை போடவில்லையடி” என்றாய்.
”அட மடையா... சர்க்கரைப் போடவில்லையென்றால் என்ன?? உன் காதலைக் கலந்து போட்ட காபி என்ன கசக்கவா போகிறது? இதைப்போல ஒரு காபியை இதுவரை நான் குடித்ததே இல்லை தெரியுமா. திருமணத்திற்குப் பிறகு தினமும் இப்படியே உன் காதலை கலந்து எனக்கு காபி போட்டுக் கொடுப்பாயா?” என்றேன்.
உன் காதல் என்ன நினைத்ததோ தெரியவில்லை. உன்னை என் பக்கமாக தள்ளி என்னை அணைத்துக்கொள்ளச் செய்தது.
வர வர நீயும், உன் காதலும் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடிவதில்லை.
Wednesday, September 25, 2013
Tuesday, September 24, 2013
Monday, September 23, 2013
Saturday, September 21, 2013
Wednesday, July 31, 2013
Thursday, July 25, 2013
Wednesday, July 24, 2013
Friday, July 19, 2013
Tuesday, July 16, 2013
காதல் மழை
உன் பிம்பம்
கலையாமல் இருக்க மழைத்துளிகளைக்
கைகளில் சேகரித்தேன்.
மனதில்
அடைக்க வேண்டியவனைக் கைகளில் அடைக்க நினைக்கிறேயே என்று கோபித்துக்கொண்டு வழிந்தோடியது மழைநீர்.
மறுநாள் உன்னைச்
சந்திக்க வந்தேன்.
“நேற்று மழையில்
நனைந்தாயா?” என்றாய்.
“ஆமாம். மழைத்துளிகளில்
உன்னைக் கண்டேன்” என்றேன் செல்லக் குறும்போடு.
“ஓஹோ. என் ஜுரத்திற்கு
நீதான் காரணமா?” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டாய்.
“உனக்கு ஜுரமா?
பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியலையே” சந்தேகமாய்ப் பார்த்தேன்.
“என்ன சந்தேகப்
பார்வை இது? வேண்டுமென்றால் நீயே பார்” என்று என்னைக் கட்டிக்கொண்டாய்.
உன் காதோரமாய் மெதுவாய்ச் சொன்னேன். உனக்கு காதல் ஜூரம் என்று.
நீ புன்னகைத்தாய்.
உன் காதோரமாய் மெதுவாய்ச் சொன்னேன். உனக்கு காதல் ஜூரம் என்று.
நீ புன்னகைத்தாய்.
அங்கே காதல் மழை
பொழியத் துவங்கியது.
Wednesday, July 10, 2013
தோட்டத்தில் மலர்ந்த காதல்
பருவ வயது வந்ததும் இருவருக்குள்ளும் சிறு இடைவெளி ஏற்பட்டது.
நான் தினமும் உன் தோட்டத்திற்கு பூ பறிக்க வந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னுடன் பூ பறிக்க நீ இப்போது இல்லை.
உன் அறை ஜன்னலில் அவ்வப்போது ஒரு நிழலுருவம் கடப்பதை உணர்வேன். நான் திரும்பும் வேளையில் அவ்வுருவம் மாயமாய் மறைந்துவிடும். மாயக் கண்ணன் விளையாடுகிறான் என்பது என் மனதிற்கு புரியாதா என்ன?
ஒரு அழகிய மதி மயக்கும் மாலைப் பொழுதில் வழக்கம் போல் பூ பறிக்க உன் தோட்டத்திற்கு வந்தேன்.
பூக்கூடை நிரம்பும் நேரத்தில் என் பின்னே அந்த நிழலுருவம். திரும்பிப் பார்த்தேன். என் மாயக் கண்ணன் நீயே தான். என் கண்கள் இந்த உண்மையை நம்ப மறுத்தது. நீயோ என்னைப் பார்த்து புன்னகைத்தாய். என் கையில் இருந்த பூக்கூடை நழுவியது. நீ அதை தாங்கிப் பிடித்தாய்.
“தினமும் இந்த பூக்களோடு என் மனதையும் சேர்த்துதானே பறித்துச் செல்கிறாய்” என்றாய் குறும்பாக.
பதில் பேச முடியாமல் திணறினேன்.
“உன் நினைவுகளை என்னிடம் விட்டு விட்டு பூக்களை மட்டும் தான் தினமும் எடுத்துச் செல்கிறாய் என்பதை அறிவாயா? என்னுடன் வா” என்று என் கைகளைப் பிடித்து கோவிலுக்கு இழுத்துச் சென்றாய்.
மீண்டும் இருவரும் சேர்ந்து கண்ணனை அலங்கரிக்க விரும்பினாய்.
அங்கு அலங்கரிக்கப்பட்டது கண்ணன் மட்டுமல்ல. நம் காதலும் தான்.
Subscribe to:
Posts (Atom)


.jpg)





.jpg)





.jpg)